தமிழ்த்தாத்தா உ.வே.சா., அவர்களின் ஒப்பற்ற கட்டுரைகள் அடங்கிய, அருமையான தொகுப்பு இந்த நூல். ‘நான் கண்டதும் கேட்டதும்’ என்ற முதல் பகுதியில், 12 கட்டுரைகள் உள்ளன. ‘புதியதும் பழையதும்’ என்ற இரண்டாம் பகுதியில் 20 கட்டுரைகள் உள்ளன.
சங்கரசிந்தாமணி புலவர், தம் வறுமை புலியை விரட்டிய முறையும்(பக். 7), விதியின் திறத்தை ஓர் தனிப்பாடல் வாயிலாக விளக்குவதும் (பக். 20), சைவ குரு ஒருவருக்கு பரிவட்டம் கிடைக்காததை கூறுவதும் (பக். 34), நெல்லை வருக்கக்கோவை என்னும் பிரபந்தத்தின் அரங்கேற்றமும் (பக். 35), மிதிலைப்பட்டி வெங்களப்பநாயக்கரின் பரம்பரையில் வந்த வண்டிக்காரரின் பரம்பரை குணமும் (பக். 42), மருதுபாண்டியர் முள்ளால் எழுதிய ஓலையின் மதிப்பும் (பக். 67), ‘டிங்கினானே’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சியும் (பக். 72), படிக்க படிக்க தேனாக இனிக்கின்றன.
பல ஆண்டுகள் ஆனாலும் தேன் இனிக்கும் என்பர்; உ.வே.சா., அவர்களின் கட்டுரைகளும் அப்படித்தான்.
டாக்டர். கலியன் சம்பத்து