தலைப்பே இந்த நூல், ‘அறிவியல் செய்திகளின் தொகுப்பு நூல்’ என்பதை உணர்த்தி விடுகிறது. சிறுவர் இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான வாண்டு மாமா, வெறும் கற்பனை மாயாஜாலக் கதைகள் மட்டுமே சிறுவர்களை ஈர்க்கும் என்ற நிலையை மாற்றி, அரிய அறிவியல் சார்ந்த புனை கதைகளை ஏராளம் எழுதியவர்.
சிறுவர்கள் இளம் பருவத்திலேயே அவசியம் அறிய வேண்டிய அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் பற்றிய எண்ணற்ற செய்திகளைச் சேகரித்து, தம் நூல்கள் வாயிலாக வழங்கிய சிறப்புடையவர்.
அந்த வகையில் இந்த நூலிலும் காகிதம், காந்தம், குடை, ஸ்டெதஸ்கோப், தொலைபேசி, கூட்டுறவு சங்கங்கள், கணிப்பொறி, நகல் இயந்திரம், லேசர்கதிர், வயலின் இசைக் கருவி, சர்க்கஸ், ஒலிம்பிக் விளையாட்டுகள் என, 137 தலைப்புகளில் செய்திகளைச் சேகரித்து தொகுத்துள்ளார். ‘ஏ 4’ அளவிலான பக்கங்களில், தேவையான படங்களுடன், விரிவான செய்திகள் உள்ளன. மாணவர்களின் பொது அறிவு மேம்பட உதவும் சிறந்த நூல்.
கவுதம நீலாம்பரன்