காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் - 629 001. தொலைபேசி : 91-4652-278525.
கவிஞர்கள் கதாசிரியர்களாக மாறும்போது கதையின் மொழி மாறுகிறுது. அதன் உருவமும் ஓட்டமும் பல புதுப்
பிரதேசங்களுக்கு இட்டுச்செல்கின்றன. உறவுகள், பிரிவுகள், நட்பு, மதம், வன்முறை, மரணம் என்று வாழ்க்கையின் பல
தளங்களில் புதைந்திருக்கும் கொடூர உண்மைகளை, சிங்கப்பூரைக் களமாக்கி எழுதுகிறார் கனகலதா. நிதர்சனமாகத்
தெரியும் பிரம்படித் தழும்புகளும், பசியும், ஐயங்களும், தனிமையும்,, அலைச்சலும், உளைச்சலும்,சோர்வும்
கதைகளாகின்றன. வறுமை, வேலை, குடிஉரிமை,
மத அடையாளம் போன்ற பல்வேறு விஷயங்களால் செலுத்தப்பட்டு,தரையில் கால் பதிக்க முடியாத ஓர் அறுபட்ட
தன்மையுடன் நடமாடுகிறார்கள் இவர் படைப்பில் வரும் நபர்கள். கர்வத்துடன் எல்லாவித வாழ்க்கை நிலைகளுக்கும்
தீர்வுகளைக் கூறும் படைப்பாளியாக இல்லாமல் தன் கதாபாத்திரங்களை அந்தரத்திலேயே உழலவிடுகிறார் கனகலதா.
இந்த இருண்மை உலகிலும் பெண்களிடையே நட்பு, நயத்துடன் கூடிய சில உரையாடல், எதிரபாராத கணத்தில்
வெளிப்படும் அன்பு என்று சில ஒளிக்கீற்றுகள் உள்ளன. அவை இருளிலிருந்து வெளியே வரும் பாதையைச் சுட்டிக்காட்டுகின்றன.