ஜோதிடம் என்பது எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பதைப் பற்றி குறி சொல்வது அல்ல; ஒருவரின் வாழ்க்கையில், அந்தந்த காலகட்டத்தில் கிரகங்கள், நட்சத்திரங்கள், ராசிகள் அனைத்தும் எந்த நிலையில் இருக்கின்றன என்பதைப் பொறுத்து, அவரது
சூழ்நிலைகளைக் கணிக்கும் கணக்கே ஜோதிடம்.
இந்தக் கணிப்பைக் கொண்டு எதிர்வரும் சில இன்னல்களை வரும்முன் காத்துக் கொள்ளலாம். அவ்வளவு தானே தவிர, கிரக நிலைகளை மாற்றி அமைக்க முடியாது. இந்தக் கணிப்பை எப்படி செய்வது என்பதை ஆசிரியர் விரிவாக விளக்கி உள்ளார்.
ஒரே நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், அவர் அந்த நட்சத்திரத்தின் எந்த பாதத்தில் பிறந்தாரோ, அதற்கு ஏற்ப பலன்கள் மாறுபடும்.
ஒவ்வொரு ராசியிலும், நட்சத்திரத்திலும் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள், அவற்றிற்கான சுலோகங்கள் ஆகியவற்றையும் ஆசிரியர் தந்திருக்கிறார். ஜோதிடத்தைப் பயில விரும்புவோரும், ஆர்வத்தில் தெரிந்து கொள்ள விரும்புவோரும் அவசியம் படித்தாக வேண்டிய நூல் இது.
மயிலை சிவா