இந்த நூலில், 17 கட்டுரைகள் உள்ளன. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., தம் கடைசி மகனுக்கு வாலேஸ்வரன் என பெயரிட்ட வரலாறு (பக்.7), பாரதியார் அரவிந்தரிடம் ரிக்வேதம் கற்றார் என்ற செய்தி (பக். 11), ‘வாழ்க நீ! எம்மான்’ பாடலை, பாரதியார் பாடிய சூழ்நிலை (பக்.18), சகோதரி நிவேதிதா கொடுத்த ஆலிலை போன்ற ஒரு இலையை, பாரதி தம் இறுதிக்காலம் வரை, புதையல் போன்று பேணி காத்தது (பக். 21), கடையத்தில், செல்லம்மாள் பாரதி பட்ட வேதனை (பக். 26), திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானை பாரதியை தாக்கிய போது, அஞ்சாது அவரை தூக்கி வந்த குவளை கண்ணனின் துணிவு (பக். 47) என, சுவாரசியமான தகவல்கள் நிறைந்த நூல். பாரதி அன்பர்களுக்கு கிடைத்துள்ள, அருமையான நூல்.
-டாக்டர் கலியன் சம்பத்து