‘நலம் 360’ என்ற தலைப்பில், வார இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்ததோடு, தமிழர்கள் மறந்த பாரம்பரிய பழக்க வழக்கங்களையும், உணவு முறைகளையும், 24 தலைப்புகளில் மிக விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறார், நூலாசிரியர்.
ஒவ்வொரு உபாதை குறித்த விவரங்களும், அவற்றின் தன்மைகளும், தவிர்க்க வேண்டிய வழிமுறைகளும், அவற்றை தீர்ப்பதற்கான உணவு முறைகளுமாக, அனைத்து விவரங்களையும் அலசிச் செல்கிறார்.
பண்டைய கால உணவு முறைகளில், நலவாழ்வு எப்படி மக்களிடம் நெடுங்காலம் நங்கூரமிட்டு இருந்தது என்பதை தெளிவுபடுத்தியும், அதை இன்றைய விஞ்ஞான காலகட்டத்தில் எப்படி அனுசரித்துச் செல்வது என்பது குறித்தும் தெளிவாக விவரிக்கிறது நூல்.
தெளிவான எழுத்து நடையும், உறுத்தாத வண்ணப்படங்களும், வசீகரிக்கும் பெட்டிச் செய்திகளுமாக, நலம் குறித்தான ஒரு முழுமையான கருத்துப் பெட்டகமாகவே இருக்கிறது. படிப்பவர்களுக்கு, நலவாழ்வு தொடர்பான அனைத்து விஷயங்களையும் விசாலமான பார்வையில் தந்தும், பார்க்க வைப்பதுமாய் இருக்கிறது, இந்த நூல்.
ஸ்ரீநிவாஸ் பிரபு