பாலசந்தரைப் பல பரிமாணங்களில் அறிமுகப்படுத்தும் அற்புதமான புத்தகம். ஒரு ‘பிலிம் மேக்கர்’ – நாட்டுக்கு நல்லது செய்ய முடியாவிட்டாலும், கெட்டதை செய்துவிட கூடாது என்பதில் தான் உறுதியாக இருப்பதாக, கே.பி.,யே சொல்லி இருக்கிறார்.
பெண்களை மையப்படுத்திப் பல கதைகளைச் சொன்னவர். நடிகர்கள் கொடி கட்டி பறந்த காலத்திலேயே, அவர் படத்தில் நட்சத்திரங்கள் இருந்தது இல்லை.
அவர் தன், எழுத்தையே நம்பினார். அவர் இயக்கிய, ‘ஏக் துஜே கேலியே’ இந்திப் படத்தின் வசூல், 10 கோடி ரூபாய். 1981ம் ஆண்டு, அது ஒரு மாபெரும் சாதனை வசூல். ‘மரோ சரித்ரா’ ஆந்திராவில், 450 நாட்கள் தொடர்ந்து ஓடியது. பெங்களூரில், 300 நாட்கள். ‘சபையர்’ திரையரங்கில், 596 நாட்கள். ஆனால், இயக்குனர் சிகரம், ‘திரைக்கதை இயக்கத்தை பொறுத்தவரை, நான் ஒரு மாணவன்’ என, அடக்கத்துடன் சொல்லி கொண்டார்.
இதுபோன்ற, பாலசந்தர் தொடர்பான முக்கிய தகவல்கள் அடங்கிய வாழ்க்கை வரலாற்று நூல் இது.
எஸ்.குரு