ஐம்பத்தாறு சிறுவர் பாடல்களின் தொகுப்பு. சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் எழுதப்பட்ட இந்தச் சிறுவர் பாடல் புத்தகத்தை ஒரு பலாப் பழமாகவும், அதன் உள்ளே இருக்கும் பாடல்களை பலாச்சுளையாகவும் ஆசிரியர் உருவகித்து, புத்தகத்தின் தலைப்பை தந்துள்ளார். சாலையின் ஓரத்தில் நடந்து செல்ல வேண்டும்; குப்பையை குப்பை தொட்டியில் போட வேண்டும் என்றும் சிறுவர்களுக்கு, இந்த நூல் அறிவுறுத்துகிறது.
வாகனத்தில் மிதவேகம் செல்ல வேண்டும் என்றும் கெட்டுப் போன உணவுகளைத் தின்ன வேண்டாம் என்றும் சிறுவர்களிடம் வேண்டிக் கேட்கிறது. எளிய சொற்கள், மேலான கருத்துகள், அறிவு தரும் சிந்தனை, அழகிய மொழிநடை. சிறுவர்கள் மட்டும் அல்லாமல் எல்லாரும் படிக்கத்தக்க பாடல்கள். கூச்சலிடும் எந்திரத்தை மாற்று மாற்று/குலுங்குவதை நடுங்குவதை நீக்கு நீக்கு/ பாய்ச்சுகின்ற ஒலிக்கதறல் மோசம் மோசம்/பயத்தினிலே விபத்ததுவே பேசும் பேசும் (பக்.87)
முகிலை ராசபாண்டியன்