தமிழுக்குத் தொண்டு செய்த கிறிஸ்தவத் தமிழ் தொண்டர்களாக, முதல் பகுதியில், 72 பேர், இரண்டாம் பாகத்தில், 83 பேர் ஆக மொத்தம், 155 தொண்டர்கள் பற்றிய, வரலாற்று இலக்கியக் குறிப்புகள் இதிலடக்கம்.ஒப்பிலக்கணம் படைத்த கால்டுவெல், பைபிளைத் தமிழில் அச்சேற்றிய சீகன் பால்கு, திருக்குறள், திருவாசகம், சிவஞான போதத்தை ஆங்கில மொழியாக்கம் செய்த ஜி.யூ.போப், முதலில் தமிழை, 1555ல் அச்சேற்றிய என்றிக்கஸ், தமிழ் உரைநடை தந்த இராபர்ட் தே நொபிலி, சதுரகராதி படைத்த வீரமாமுனிவர் இப்படிப்பட்ட பிறநாட்டவருடன் இரட்சண்ய யாத்திரிகம் தந்த எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை, நாவல் படைத்த மாயூரம் வேதநாயகம் பிள்ளை, ஆபிரகாம் பண்டிதர், தனிநாயகம் அடிகள், மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் என, 15ம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை தமிழ் மொழி, இலக்கியம் வளர பாடுபட்ட தொண்டர்களின் சுருக்க வரலாறு இதில் தொகுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் பாகத்தில் வலம்புரிஜான், பொன்னடியான், சாலமன் பாப்பையா உள்ளிட்ட இலக்கியப் படைப்பாளிகள், 83 பேர் இணைக்கப் பட்டுள்ளனர்.
-பின்னலூரான்