பேராசிரியர் ஆனந்த் டெல்டும்ப்டே, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த, இடதுசாரி – தலித் சிந்தனையாளராக அறியப்பட்டுள்ளார். அவர், 2005ல் வெளியிட்ட ஆங்கில நூலின் தமிழாக்கம் இது. ஜாதி முறைமை ஏகாதிபத்தியத்தின் வடிவம். எனவே, ஏகாதிபத்தியத்தை எதிர்ப்போர், ஜாதி முறையை ஒழிப்பது அவசியம். இடதுசாரிகள் இதைச் செய்யவில்லை.கேரளாவில் நாராயண குரு, மகாராஷ்டிரத்தில் மகாத்மா பூலே போன்றோரின் இயக்கங்கள், ஜாதியை மறுத்தனவே அன்றி ஒழிக்கவில்லை. அம்பேத்கர், ஜாதி ஒழிப்பில் உறுதியாகவும், தெளிவாகவும் இருந்தார் என்றாலும், வெற்றி பெற்றதாகக் கூற முடியவில்லை.
காரணம், தாழ்த்தப்பட்ட ஜாதிகளுக்குள்ளே உள்ள ஜாதி உட்பிரிவுகள் மற்றும் ஜாதி ஒரு அடையாளமாக மாறிப் போனது தான். ஜாதி அமைப்பு என்பது, இந்தியாவுக்கே உரியது. ஐரோப்பிய நிலப்பிரபுத்துவ முறையுடன், இதை ஒப்பிட்டு புரிந்துகொள்ள முடியாது. ஜாதியை புறக்கணித்தது, இடதுசாரிகள் செய்த தவறு. மாறாக, ஜாதி அமைப்பையே ஒழித்து காட்டுவதன் மூலம், ஏகாதிபத்திய எதிர்ப்பு இன்னமும் கூர்மை அடைந்திருக்கும். இதுபோன்ற கருத்துக்கள் இந்த நூலில் உள்ளன.
திருநின்றவூர் ரவிக்குமார்