‘இழப்பதற்கு தயாராக இருந்தால் வாழ்க்கை ஏராளமான விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கும் என்ற அடிப்படை பாடத்தை இப்போது வரை நான் மறக்கவில்லை’ எனும் (பக்.11) நீதியரசர் கே.சந்துருவின் கட்டுரைகள், நேர்காணல்கள், உரைகள், கேள்வி – பதில்கள் இதில் தொகுக்கப்பட்டு உள்ளன.
‘கோவிலில் பெண்கள் பூசாரியாக இருக்கலாம்; சென்னை நகரில் விளம்பர பலகைகளை நீக்க வேண்டும்; நூலகங்களுக்குப் பொருத்தமற்றவர்களை நியமிப்பது ஒரு இனத்தின் கலாசாரத்தையும், சரித்திரத்தையும் அழிப்பதற்குச் சமம்’ இப்படி எத்தனையோ சமூக அக்கறை கொண்ட தீர்ப்புகளைத் தந்தவர்.
‘ஆங்கிலேயர்கள் உருவாக்கிக் கொடுத்து இன்று வரை கடைப்பிடித்து வரும் டாம்பீக நடைமுறைகள் பலவற்றையும், சந்துருவின் நீதிமன்ற வாழ்க்கை கேள்விக்குறியாக்கியது’ (பக்.37) என, மகேந்திரன், தனதுரையில் குறிப்பிட்டுள்ளார்.
எளிமையான நீதியரசரைப் பற்றி ஏராளமான செய்திகள் இருந்தபோதிலும், எளிமையான இந்த நூல் விசாலப் பார்வையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது அருமை.
பின்னலூரான்