இந்த நூல், சமயம் சாராத சமூகச் சீர்திருத்த அமைப்புகள் பற்றி முழுமையாக எடுத்துரைத்துள்ளது. தீண்டாமைக் கொடுமை, ஜாதி ஒழிப்பு, பிறப்பு வழி ஜாதி உயர்வு, ஆதிக்கம், அவற்றின் அவலங்களை மிகத் துல்லியமாக உணர்த்துகிறது.
இந்தியாவின் துன்பங்களான வறுமை, ஜாதி முதலிய இரண்டு குழப்பங்கள், சமத்துவம் குறித்த பாரதியின் அணுகுமுறை ஆகியவற்றை நூல் விளக்குகிறது. பாரதியின் ஓர் அரிய கடிதம் இதில் இடம் பெற்றுள்ளது. பாரதி தம் நோக்கில், பிராமணர், பிராமணரல்லாதார் பற்றிய விமர்சனத்தை முன் வைத்தவர். பெண்ணியச் சிந்தனைகளின் முன்னோடியாகத் திகழ்ந்தவர். சமூக சீர்திருத்தப் பொறுப்பாளர் என்பதை, நூல் முழுவதும் உள்ள தகவல்கள் மிக தெளிவாக எடுத்துரைக்கின்றன.
மேலும், பாரதியோடு, ஜி.சுப்பிரமணிய ஐயர், பாவேந்தர் ஆகியோருடனான உறவுகள், அவர்களுடைய கருத்து பரிமாற்றங்கள் அனைத்தையும், படிப்பவர்களுக்குச் சலிப்பு தட்டாமல் அவர்களோடு கூட பயணப்படச் செய்கிறது. நூலில் சேர்க்கப்பட்டிருக்கும் பிற்சேர்க்கை, பாரதியின் சமூக சீர்திருத்த வரலாறு, அவரது பன்முகப் பார்வை பற்றி தெரிந்து கொள்ள பெரிதும் பயன்படும்.
-ஜே.ஆர்.லட்சுமி