இந்த தொகுப்பில், மொத்தம், 121 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியம் முதலாக ஆயிஷா நடராசன் படைப்புக்கள் ஈறாக ஆய்வுப் பொருள், பல்வேறு களங்களில் அமைந்துள்ளது. சித்தர் குறித்த ஆய்வுக் கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. களஆய்வின் வெளிப்பாடாக, திருவக்கரை வக்கர காளியம்மன் கோவில் – ஓர் ஆய்வு, வீரராகவப் பெருமாள் கோவில் கல்வெட்டுக்கள் கூறும் சமுதாயம் ஆகிய கட்டுரைகள் திகழ்கின்றன.
இந்த தொகுப்பில் காணப்படும் ஒவ்வொரு கட்டுரையும், இலக்கியங்களில் பதிவாகி உள்ள வாழ்வியல் செய்திகளை சான்றுகளுடன் எடுத்துரைக்கிறது. கல்வெட்டுக்களில் உள்ள சமுதாயச் செய்திகளும் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளன. சமகால ஆய்வுகள் தொகுப்புகளாக வெளிவருதல் அவசியம் என்பதை, இந்த நூல் உணர்த்துகிறது.
முனைவர் பன்னிருகைவடிவேலன்