சைவ சமயம் குறித்த ஒரு சிறிய கையேடு என, இந்த நூலைச் சொல்லலாம். மொத்தம், 10 தலைப்புகள். முதல் தலைப்பில், சைவ சமயத்தின் தோற்றம், உட்கூறுகள் காட்டப்படுகின்றன. இன்றைய சைவ உலகம், மொழிப் பிரச்னையால் பிளவுண்டு கிடக்கிறது. உண்மையில், சைவம், தமிழையும், வடமொழியையும் ஏற்றுப் போற்றுகிறது என்பதை, ‘வேத – சிவ – ஆகமங்கள்’ என்ற இரண்டாவது தலைப்பில் விவரிக்கிறார், நூலாசிரியர்.
தொடர்ந்து பழந்தமிழ் இலக்கியங்களில் சிவன் பற்றிய குறிப்புகள், சைவ திருமுறைகள் குறித்த அறிமுகம் ஆகியவை இடம் பெறுகின்றன. அதையடுத்து, ௬௩ நாயன்மார்கள் பற்றிய தகவல்கள் பட்டியலாக இடம் பெறுகின்றன. தமிழகத்தில் தற்போது முற்றிலும் இல்லாமல் போன, புராண நூல்கள் பற்றி அடுத்து குறிப்பிடுகிறார் நூலாசிரியர். அதையடுத்து சைவ சித்தாந்த சாத்திர நூல்கள் பற்றி விரிவான, வரலாற்றுப் பார்வையுடன் கூடிய அறிமுகம், விளக்கத்தை அளிக்கிறார்.
விகிர்தன்