உலகப்புகழ் பெற்ற, 16 சிறார் சித்திரக்கதைகள், தனித்தனி புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. குரோகட் ஜான்சன், ஜேம்ஸ் தர்பெர், மன்ரோ லீப், அலிகி உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களின் சித்திரக் கதைளை, எளிமையாக மொழிபெயர்த்து உள்ளார். பின்பக்க அட்டைகளில் இருக்கும், நூலாசிரியர்களின் சின்ன, ‘பயோ – டேட்டா’வும் பயனுள்ளதாக இருக்கிறது.
கால்நடையாகவே சென்று, அமெரிக்க கிராமங்களில், ஆப்பிள் விதைகள் விதைத்து, மரங்கள் வளர்த்த ஆப்பிள் ஜானியின் கதை நெகிழ்ச்சி ஊட்டு வதாக உள்ளது. ஒவ்வொரு கதையும், ஒரு அனுபவத்தை தருகிறது; கதையோட்டத்திற்கு தகுந்த சித்திரங்களும் அருமை!
சிறுவர், சிறுமியருக்கு, இந்த புத்தகங்களை வழங்கலாம்; அவர்கள் படிக்கும்போது, கற்பனைத் திறன் விரிவடையும்; வாசிப்பு பழக்கம் வளரும்.
சிறுவர்களின் கைகளில் அகப்பட்டிருக்கும் அலைபேசியை பறித்துவிட்டு, இந்த புத்தகங்களை கொடுங்கள்; அவர்களின் வாழ்க்கை பொருள் உள்ளதாக மாறும்.
சி.கலாதம்பி