சுதந்திர போராட்ட காலத்தில், காங்கிரஸ் மேடைகளில் எதிரொலித்த வந்தே மாதரம், மதச்சாயம் பூசப்பட்டு நிறுத்தப்பட்டது. ஆனாலும், பக்கிம் சந்திர சட்டர்ஜியின் ‘வந்தே மாதரத்தின்’ தாக்கம், மற்ற மொழி கவிஞர்களிடம் கொஞ்சமும் குறையவில்லை.
வந்தே மாதரத்தின் உள்வாங்கல், தமிழ் கவிஞர்களிடமும், திரை இசைப் பாடல்களிலும் இருப்பதை உணர முடியும். வந்தே மாதரத்தின் வரலாற்றை, சுதந்திர போராட்டத்துடன், பின்னி பிணைந்துள்ள அதன் வரலாற்றை விளக்கியுள்ளார்.
சுதேச இயக்கத்திற்கு வலுகொடுத்த இந்த பாடல், பின்நாட்களில் காங்கிரசுக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியது. கருத்து வேறுபாடுகளால், வந்தே மாதரம் பாடுவது கைவிடப்பட்டது.
ஒரு தலைமுறைக்கு உணர்வு கொடுத்த பாடல், அதன் வரலாறு, எதிர்ப்பு, பின்னணி, காரணம் என அனைத்தையும் ஆசிரியர் விளக்கியுள்ளார்.
ஜே.பி.,