‘அரசாங்கத்தின் ஒவ்வொரு துறையிலும், அதிகமான பொருட் செலவாகிறது...’ செட்டிநாட்டு அரசர் அண்ணாமலையார் ஈட்டல், காத்தல் வகுத்தல் என்ற முப்பெரும் கொள்கைக்குத் தம்மை உட்படுத்தி அவற்றை நிறைவேற்றி, மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர். தமிழகத்தில் ஆக்கமான பணிகள் செய்தோரில், ஒப்பற்ற அழியாத பணிகள் செய்தவர்.
அவரது வாழ்க்கை குறித்து, 1951ல் அவரது மணிவிழா மலராக, புலவர் வித்துவான் மு.அருணாசலம் பிள்ளையால் வெளியிடப்பட்ட, ‘அண்ணாமலை வள்ளல்’ எனும் நூல், தற்போது மறுபதிப்பில் வெளியாகி உள்ளது. அரசர் அண்ணாமலையார் குறித்து அவரது இளமைப்பருவம் துவங்கி, அவரது வாழ்க்கை குறித்தான ஒவ்வொரு விவரத்தையும் அழகிய சித்திரமாக இந்த நூல் தீட்டிக் காட்டுகிறது.
‘அரசாங்கத்தின் ஒவ்வொரு துறையிலும் அதிகமான பொருட்செலவாகிறது. செலவைக் குறைக்க வேண்டுமென்று பேச்சு நடக்கிறது, செயலைக் காணோம்’ (பக்.- 32) என, 1922ல் சட்டசபையில் பேசிய, அவரது பேச்சு இன்று வரை பொருந்திப் போகிறது.
இந்த நூல், இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்.
ஸ்ரீநிவாஸ் பிரபு