பழங்கால கோவில்கள் அதிக அளவில் உள்ள முதன்மையான மாநிலம் தமிழகம். சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் பல்லாயிரக்கணக்கில் இங்கு உள்ளன. அவை ஒவ்வொன்றும், கட்டடக்கலையிலும், அமைப்பு முறையிலும், பல மாற்றங்கள் கொண்டவை. வரலாற்று கால முறைப்படி ஏராளமான வித்தியாசங்களை காண முடியும். அத்துடன், ஆகம விதிகளின் படி, ஒவ்வொரு விதமாகவும் அமைக்கப்பட்டுள்ளன. இதனை வரலாற்று பின்னணியுடன் விளக்கியுள்ளார் நூலாசிரியர். தமிழகத்தின் அற்புதமான கட்டடக்கலை சிறப்புகள், இந்த நூலில் எடுத்து கூறப்பட்டுள்ளன.
அதேபோல், ஆலய வழிபாட்டு முறை பற்றியும் விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார். கோவில்களில் வெவ்வேறு விதமான வழிபாட்டு முறைகள் இருப்பதற்கான காரணத்தையும் நூலாசிரியர் விளக்குகிறார். ஆலய கட்டமைப்பையும், வழிபாட்டையும், எளிதில் புரிந்து கொள்ள விரும்புவோருக்கு இந்த நூல், ஒரு கையேடாக விளங்கம்.
ஜே.பி.,