இந்தியாவில் தீண்டாமை என்பது நீண்டகால விவாத பொருளாக இருந்து வருகிறது. அது இந்து மதத்தோடு இணைத்து பார்க்கப்படுகிறது.
உண்மையில், இந்து மதத்தில் தீண்டாமை இல்லை; ஞானிகள் அதை அங்கீகரிக்கவில்லை என, ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த கீழ்குலத்தவராக கருதப்பட்ட மாறநேர் நம்பியின் இறுதிச் சடங்குகளை செய்த பெரிய நம்பி, அவரை கடவுளான நம்பெருமாள் அங்கீகரித்தது, நந்தனார் வரலாறு, திருவிசநல்நூர்லூ ஸ்ரீதர அய்யாவாள் வரலாறு, ஆதிசங்கரர் – புலையன் விவாதம், பல்வேறு ஆதாரங்களை நூலாசிரியர் முன்வைக்கிறார்.
விடுதலைக்கு பின்னர் தான், தீண்டாமை அதிகரித்தது; தாழ்த்தப்பட்டோர், சமண, பவுத்த மதங்களை பின்பற்றவில்லை; உயர்குடியினர், தாழ்த்தப்பட்டோரை கொடுமை செய்யவில்லை; எந்த ஜாதிப் பெயரும் இழிவானதல்ல; ஜாதிக் கொடுமைகளுக்கு ஆதிக்க மனோபாவம் தான் காரணம்; அந்த மனோபாவம், ஊருக்கு ஊர், ஜாதிக்கு ஜாதி மாறுபடுகிறது என, பல்வேறு கருத்துகளை நூலாசிரியர் தெரிவித்துள்ளார். அரசு, அரசியலுக்கு அப்பாற்பட்டு, மதத் தலைவர்களால் தான், தீண்டமையை அகற்ற முடியும் என்ற வாதத்தையும் முன்வைக்கிறார்.
ஜே.பி.,