உத்தியோகம் புருஷ லட்சணம் என்பர். அது இப்போது ‘மனுஷ லட்சணம்’ ஆகிவிட்டது. அதனால்தான், எல்லாருமே வேலைக்குப் போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்குத் தேவையான ஆலோசனைகளை நகைச்சுவையுடன் இந்த நூல் நம்முடன் பகிர்ந்து கொள்கிறது. வேலை, ஒரு மனிதனின் வாழ்க்கை அடையாளம். ‘கோவை பொறியாளருக்கு கனடா அரசு விருது, விழுப்புரம் ஆசிரியர் மீது விசாரணை, லாரி மோதி வங்கி அதிகாரி படுகாயம்’ என, பத்திரிகை தலைப்புகள் கூட, ஒருவரின் பெயரைச் சொல்வதற்கு முன், அவர்களின் பணி அடையாளத்தைச் சொல்கின்றன. (பக். 11) நாட்டில் மட்டுமல்ல, அலுவலகத்திலும் அரசியல் இருக்கிறது. இதற்காக, நாமும் அரசியல் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை; அரசியல் தெரியவேண்டியது அவசியம். வாழ்க்கை முழுதும் தொடந்து கற்க வேண்டிய வித்தையாக வேலை மாறி வருகிறது. உங்கள் படிப்பு, காலி பெருங்காய டப்பாவா அல்லது அட்சயப் பாத்திரமா என்பதை நீங்கள் செய்யும் வேலை தான் முடிவு செய்யும்!
மனோ ரெட்