மயில் அகவும்; குயில் கூவும்; ஆந்தை அலறும்; யானை பிளிறும்; குதிரை கனைக்கும்; நாய் குரைக்கும்; புலி உறுமும்; நரி ஊளையிடும்; சிங்கம் கர்ஜிக்கும்... இப்படி, தமிழ் மொழி எத்தனை அழகான சொல் இணைகளைக் கொண்டுள்ளது. இதை மாற்றி மாற்றிப் போட்டால் முற்றிலும் பொருந்தாது.
தற்போது, கத்துகிறது என்னும் வினையை எல்லாவற்றிற்கும் பொருந்தி, இது போன்ற பல அரிய வினைகளை நாம் புறந்தள்ளி விட்டோம். இவை, நமக்கு நன்கு அறிந்த சொற்சேர்க்கைகள் தான்.
நாம் அறியாத லட்சக்கணக்கான சொற்சேர்க்கைகள் மொழியில் புழங்கிக் கொண்டிருக்கின்றன. அவை அனைத்தையும் தொகுத்து, தமிழறிஞர் பேராசிரியர் பா.ரா.சுப்பிரமணியன் சிறப்பான அகராதி ஒன்றை உருவாக்கியுள்ளார்.
அகராதியில் உள்ள தொடர்கள் தமிழில் மட்டுமல்லாமல், ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு உள்ளன. இந்த சிறப்பு அகராதியை பாரதி புத்தகாலயம் வெளியிட்டு உள்ளது. புத்தக காட்சியில், 522வது அரங்கில், இந்த அகராதி கிடைக்கும்.