‘எனக்கு டயாபடிக்’ என்று சொல்வது, ‘இன்று வெயில் அதிகம்’ என்பது போல இயல்பான ஒன்றாகி விட்டது. சர்க்கரை நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்; செய்யக் கூடாது என்பது போன்ற பொதுவான கேள்விகளுக்கு நண்பர்கள் உள்ளிட்டோர், நாம் எதிர்பார்த்ததற்கும் மேலாக, தகவல்கள் தருவர். ஆனால் அப்படியும் சர்க்கரை நோயாளிகளின் சந்தேகம் தீர்ந்திருக்காது. இந்த நூல், அவர்களின் அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறது. அவர்களுக்கு, சுய கட்டுப்பாடும் மனோ தைரியமும் இருந்தால் போதும்; ஆரோக்கியமாக வாழ முடியும் என்ற நம்பிக்கையை தருகிறது.
கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன்பே வெளிவந்த நூல், புதிய பதிப்பாக மீண்டும் வந்திருப்பதால் சர்க்கரை நோய் பற்றிய சமீபத்திய தகவல்கள் இதில் சேர்க்கப்படவில்லை. ஆனால் நோய் பற்றிய பொதுவான தகவல்கள் இருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு தெளிவையும் நம்பிக்கையையும் தரும் நூலாக இது விளங்குகிறது.
கீதா