‘குமுதம்’ வார இதழில் தொடராக வந்து, பலரது பாராட்டுக்களை பெற்ற கட்டுரைகள், தற்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. வாழ்வில் முன்னேற்றம் அடைய, ‘கூட்டத்தோடு கோவிந்தா போடாதீர்கள்’ முதல், ‘உங்கள் நண்பர்களை மாற்றுங்கள்’ வரை, பத்து விதமான ஆலோசனைகளை, நூலாசிரியர் தருகிறார்.
திட்டமிடல், நேரத்தை வீணாக்காமை, முயற்சி, கோபத்தை விட்டொழித்தல் என, வழக்கமான அறிவுரைகள் தான் என்றாலும், அதை கூறிய விதத்தில், நூலாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். சிறுகதைகள் மற்றும் சம்பவங்கள் மூலம், எளிமையான நடையில், தான் சொல்ல நினைத்த கருத்துக்களை, வாசகனிடம் எளிதாக கொண்டு போய் சேர்க்கிறார்.
பின்பற்றுகிறோமோ இல்லையோ, புத்தகத்தை நிச்சயமாக ரசித்துப் படிக்கலாம்!
சி.சுரேஷ்