ஆசிரியர்-முனைவர் ந.க.மங்கள முருகேசன், வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை,25,பீட்டர்ஸ் சாலை, சென்னை-600 014. இந்திய வரலாறு கி.பி.1206 முதல் கி.பி.1526 வரை என்னம் தலைப்பில் அமைந்த இந்நூல் டெல்லிச் சுல்தானியம் நிறுவப் பெற்றது முதல் தலைக்கோட்டைப்போரில் விஜய நகரப் பேரரசு வீழ்ந்தது வரையிலான விளக்கமான வரலாற்றுக் கருவூலமாகும்.தமிழில் இக்காலங் குறித்த முழுமையான எளிய நடையில் அமைந்த நூல் இல்லாத குறையை இந்நூல் நிறைவு செய்கிறது. டெல்லிச் சுல்தானியர்களின் கால வரலாற்றை அறிய உதவும் ஆதாரங்கள் இதில் எடுத்துறைக்கப்பட்டுள்ளன.இக்காலவரலாற்றில் எழுந்துள்ள பல்வேறு வரலாற்றுச் சிக்கல்கள் ஆய்வு செய்யப் பெற்றுப் பல்வேறு வரலாற்று அறிஞர்களின் கருத்துகளை ஆராய்ந்து முடிவுகள் ,ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவு செய்யப்பட்டுள்ளன என்பது ஒரு சிறப்பாகும்.இந்நூல் கல்லூரிகளில் பட்ட வகுப்பு,மேல்பட்ட வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் இந்திய அரசுப் பணித் தேர்வு எழுதுவோர், மாநிலத் தேர்வாணைக்குழுத் தேர்வு எழுதுவோர் ஆகியோருக்கும் மிகவும் பயன்தரத்தக்க நூலாகும்.தமிழகப் பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டங்களுக்கும் உகந்ததாகும்.