முஸ்லிம் கதை மாந்தர்களைக் கொண்ட, சிறந்த கதைகள் அடங்கிய நூல். ‘ஐரோப்பாவின் நோயாளி’ என அழைக்கப்பட்ட துருக்கி, முதல் உலகப் போரில் மல்யுத்த வீரனாக எழுந்து நின்றதைச் சொல்லும், ‘கல்விப்போலி போர்க்களம்’ என்ற கதை, ஒரு சிறந்த சரித்திர ஆவணம். கதைக்கான கருக்கள், பெரும்பாலும் உண்மை நிகழ்வுகளில் இருந்தே எடுத்துக் கையாளப்படுகின்றன என்று, நூலாசிரியர் தன் முன்னுரை யில் கூறியுள்ளார். – எஸ்.குரு