உத்தரகண்ட் பெருமழைக்குப் பின்னான சேதம் குறித்து பேசுகிறது இந்நூல். காலம் தந்த வேளாண் போராளி என்ற தலைப்பில், பேசப்படும், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் உருவாக்கிய விவசாயக் கொள்கை, திருப்பூர் சாயக்கழிவு பற்றிய அவரின் எண்ணம் ஆகியவை இடம் பெற்றிருக்கின்றன.
சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளுடன் போர் ஏற்பட, காலநிலை மாற்றமே இந்தியாவுக்கு ஒரு காரணமாக அமையலாம் எனக் கூறும், ‘வெப்பத்துள் கருகும் மனிதன்’ கட்டுரை என, உலகளவிலான சுற்றுச்சூழல் பற்றி பேசும், 15 கட்டுரைகளின் தொகுப்பாகும்.
சுற்றுச்சூழலும் நிலக்கரியும், வெப்பநிலை மாற்றமும் உயிரிகள் மறைவும் என, பல்வேறு சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களை விரிவாக பேசுகிறது.
நடுவூர் சிவா