இயற்கை முறை மருத்துவர்களான சேகர் மற்றும் மதுரம் இணைந்து எழுதியுள்ள இந்த புத்தகத்தில், நோயை எப்படி கண்டுபிடிப்பது என்பதில் துவங்கி, ஆஸ்துமா, அல்சர், நிரிழிவு, கேன்சர், மூட்டு வலி என்று ஒவ்வொரு நோயும் ஏன் வருகிறது என்பதற்கான விளக்கம் தரப்பட்டிருக்கின்றன. அதற்கான இயற்கை வைத்திய முறைகளும் சொல்லப்பட்டு உள்ளது. இரண்டு பாகங்களாக, 55 அத்தியாயங்களில், ஒவ்வொரு பிரச்னை குறித்தும் தனித்தனியாக விளக்கம் உள்ளன. நீண்ட நாட்களாக இருக்கும் உடல் பிரச்னைக்கு அலோபதி மருத்துவத்தில் துவங்கி பல்வேறு முறைகளையும் பின்பற்றி நிவாரணம் கிடைக்காவிட்டால், வேறு வழி இல்லாமல், ‘இதையும் முயற்சித்து பார்க்கலாமே’ என்று, இயற்கையான முறையில் தீர்வு தேடுவது மக்கள் மனதில் அதிகரித்து வரும் நிலையில், இந்த நூல் பயன்படும்.