‘அச்சம் தவிர் துவங்கி’, ‘வவ்வுதல் நீக்கு’ வரை உள்ள, பாரதியின், 110 புதிய ஆத்திசூடி வரிகளுக்கு, 240 பக்கங்களில், நா.சங்கரராமன் விளக்கவுரை எழுதி உள்ளார். பலர், செய்யுளுக்கான விளக்கவுரையில், தாம் படித்த இலக்கியங்கள், தமது கருத்துக்களை எடுத்துக்காட்டி விளக்குவர்.
ஆனால், இந்த நூலில், முழுக்க முழுக்க, பாரதியின் மற்ற கவிதைகள், அவை இயற்றப்பட்ட சூழல், அவர் வாழ்வில் கடைபிடித்த நெறிகளை கூறி விளக்கி உள்ளார்.
அச்சம் தவிர் என்றால், அஞ்சாதே என்பது பொருளல்ல; மாறாய், எதிர்ப்பு, சதி, குழப்பம், துன்பங்களுக்கு அஞ்சாமல், பழி, பாவங்களுக்கு அஞ்சு என, விளக்குகிறார். ஆண்மை தவறேல் என்பதற்கு, ஆண்மை என்பது, அடக்குவதில் இல்லை; மனதை ஆளுகையில் உள்ளது என்னும் பாரதியின் விளக்கம், கயவர்களின் நெற்றிப்பொட்டில் அறைகிறது. இந்த நூலைப் படிக்கையில் பாரதியின் பல கவிதைகளை படித்த நிறைவு ஏற்படுகிறது.
நடுவூர் சிவா