மோகன் சுந்தரராஜன், நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா ஏ-5 கிரீன் பார்க், புதுடில்லி -110 016.
விண்வெளிக்காலத்தில் வியப்பூட்டும் தனிச்சிறப்புகள், குறிப்பாக இந்தியாவின் சாதனைகள், எளிய நடையில் விளக்கப்பட்டுள்ளன. இந்நூலின் சிறப்புப் பகுதிகள் :
* செயற்கைக் கோள்களுக்கு இயற்கை அளித்துள்ள சுற்றுப் பாதைகள்.
* தகவல் தொடர்பு, ஒளிபரப்பு, வானிலை ஆய்வு ஆகியவற்றில் ஏற்பட்டுவரும் புரட்சியின் அடிப்படை நெறிமுறைகள்.
*விண்ணை அடைய உதவும் ஏவுகணைகளும், மண்ணைக் காக்க உதவும் எறிபடைகளும் இயங்கும் முறைகள்.
*உளவறியும் கோள்களும், இடமறியும் கோள்களும் விரல் நுனியில் உலகத்தொடர்பு அளிக்கும் கோள்களும் தோற்றுவிக்கும் புதுமைகள்.