நாம் அன்றாடம் பயன்படுத்தும் சாதாரண பொருட்கள் அல்லது பயன்படுத்தி, இனி தேவைப்படாது என தூக்கி எறியும் பொருட்களைக் கொண்டு, பல அதிசயிக்கத்தக்க அழகுப் பொருட்களை தயாரிக்கும் கலையை கற்றுத் தருகிறது, இந்நூல். ‘இதற்குள், இவ்வளவு இருக்கிறதா’ என எண்ணத் தோன்றும் வகையிலான, பல ஆச்சரியங்கள் உள்ளே காத்திருக்கின்றன. பயனுள்ள நூல்; படித்தால் நிச்சயம் பலன் உண்டு.