சமூகத்தில், காதலும், வன்முறையும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். இப்போதுள்ள இளைஞர்கள் குடும்பம், சமூகம் என, இரு வாழ்க்கை வாழ்கின்றனர். சமுதாயத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தாலும், குடும்பத்தில் பழைமை சார்ந்த நெருக்கடிகளால் அவர்கள் சிக்கித் தவிக்கின்றனர். இந்நூல் அதை படம்பிடிக்கிறது. ஊழல், லஞ்சத்தில் பிழைப்பையொட்டி வாழ்ந்து வருபவர்களின் பிள்ளைகள், வாழ்க்கையில் எப்படி தடம் மாறுகின்றனர் என்பதையும் இந்நூல் கூறுகிறது.