சினிமாவின் துவக்க காலத்திருந்து துவங்கி, நவீன காலம் வரையில், ஆங்கிலத்தில் வெளிவந்த, ஜாக்சி எல்லீஸின் (A History of film) என்ற நூல், உலக சினிமாவின் வரலாற்றை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தும் நூல். இந்நூலை, வேட்டை எஸ்.கண்ணன் அழகு தமிழில் மொழிபெயர்த்து, தமிழ் வாசகர்களுக்கு அளித்துள்ளார்.
புதிய சாதனமான சினிமாவின் குழந்தை பருவம், 1895 – 1914 அமெரிக்க சினிமாவின் எழுச்சி, 1914 – 1919 – ஸ்காண்டிநேவியப் படங்கள், 1917 – 1924 – ஜெர்மனியின் மகத்தான மவுனங்கள், 1919 – 1925 – சோவிய சினிமாவில் கலையும், முரணியக்கமும், 1925 –1929 – இருபதுகளில் ஹாலிவுட், 1919 – 1929 – பிரெஞ்சு சினிமாவின் பொற்காலம், 1935 – 1939 – முப்பதுகளில் ஹாலிவுட், 1929 – 1939 நாற்பதுகளில் ஹாலிவுட், 1940 – 1952 பிரான்சின் புதிய அலை, 1954 என்றெல்லாம் பட்டியல் போட்டு – உலக சினிமாவின் வளர்ச்சியை படம் வரைந்து காட்டுகிறார், ஜாக்சி. எல்லீஸ்.
சினிமா இலக்கிய பொக்கிஷம்!
– எஸ்.குரு