அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி, பெடரல் கட்சியின், ஜார்ஜ் வாஷிங்டன் முதல், 45வது ஜனாதிபதியாகத் தற்போது பொறுப்பேற்றுள்ள, டொனால்டு டிரம்ப் வரை அனைவரது சுருக்க வரலாறும் இடம் பெற்றுள்ளது.
பெடரல் கட்சி உடைந்து, மூன்றாவது ஜனாதிபதியாக வந்த, தாமஸ் ஜெபர்சன் அமெரிக்க அரசியல் அமைப்பை உருவாக்கியவர் (9). 16வது ஜனாதிபதியாக வந்த ஆப்ரகாம் லிங்கன் பற்றிய நூல்கள் (பக்.43), பைபிளுக்கு அடுத்தபடியாக அதிகமாக எழுதப்பட்டவை, 26வது ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் காலத்தில் பனாமா கால்வாய் வெட்டப்பட்டது (பக். 68).
‘செய்தியாளர்கள் சந்திப்பை’ முதன் முதலில் ஏற்படுத்தியவர், 28வது ஜனாதிபதியான தாமஸ் உட்ரோ வில்சன் (பக்.73). ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த (பக்.101) ரோனால்டு வில்சன் ரீகன் இரு முறை ஜனாதிபதி பதவி வகித்தவர்.
தீவிரவாதி ஒசாமா (நூலில் ஒபாமா என்று பிழையாக உள்ளது) பின்லேடனை, ஒழித்த முதல் ஆப்ரிக்க – அமெரிக்கர் என்ற புகழ் பெற்று இருமுறை பதவி வகித்த ஒபாமா, இப்படி பல சுவாரசியமான நிகழ்வுகளைக் கொண்ட இந்நூல் மாணவர்களுக்குப் பயன்படக் கூடியது.