நாற்பத்தியேழு தலைப்புகளுடன் உள்ள இக்கவிதை நூல், குடும்ப உறவுகள், பள்ளிக்கூடம், கல்லுாரி என உணர்வுகளைத் துாண்டும் கற்பனையுடன் விரிவடைந்து திருமணம், முதியோர் இல்லம் வரைச் செல்கிறது. ‘படிக்காத மேதையாய் இருந்து படித்த மேதைகளை உருவாக்கினார் அந்த பொதுவுடைமைக் காவலர்’ என காமராஜரையும், ‘மெல்லிய ரோஜாக்களை நேசிக்கும் மின்னிய குணம் கொண்டவர்’ என ஜவகர்லால் நேருவையும் விளக்குகிறது.
கரியமில வாயு கலக்காத பூமி வேண்டும், பிறக்குமா இன்னொரு பூமி என இயற்கையுடன் கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் கவிதைகளுடன், படித்தவுடன் புரிந்து கொள்ளும் வகையில் படத்துடன் எளிய நடையில் அமைந்த தொகுப்பு நூல்.
– முனைவர் க.சங்கர்