இந்த அருமையான நூலில், தமிழகக் கல்வி மற்றும் ஒட்டுமொத்த சமூகம் குறித்த விமர்சனங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைக்கதை உருவாக்கப்படும் விதம் முதலில் விவரிக்கப்படுகிறது. பின்னர், மாதிரித் திரைக்கதை என்று கதை வடிவில் இடம்பெறுகிறது.
பின்லாந்தில் இருந்து வரும் ஆசிரியை, சரஸ்வதி மேரி என்ற சாராமேரி தமிழகப் பள்ளியில் செய்யும் சீர்திருத்தங்களும், அதற்குப் போடப்படும் முட்டுக்கட்டைகளுமே மாதிரித் திரைக்கதையில் இடம் பெறுகின்றன. திரைப்படமானது, 10 குறும்படங்களின் தொகுப்பு வடிவில் எழுதப்பட்டுள்ளது. மாற்றுக்கல்வி மற்றும் சமூக ஆர்வலராக அனைவரும் இந்தப் புத்தகத்தை ரசித்துப் படிக்கலாம்!
– எஸ்.குரு