ஒரு மகானின் வரலாற்றை, உரைநடை, கவிதை, நாடகம், என்ற வகையில், விளக்கும் பன்முகத் தன்மை கொண்டது. ராமானுஜரின் வாழ்க்கை, இவருடைய, ஆயிரமாவது ஆண்டில் ஆசிரியர், நல்ல கதாபாத்திரங்களை கொண்டு, 253 காட்சி களில் நூலை மிளிர செய்துள்ளார்.
வைணவ வழிபாட்டு முறையை, நன்கு சீர்படுத்தி, மேடு, பள்ளம் நீக்கி, உலகை உன்னத நிலைக்கு கொண்டு வந்தவர், ஸ்ரீ ராமானுஜர். இவர் கற்ற முறை, ஆச்சாரியர் பற்றிய செய்திகள், ஸ்ரீ பாஷ்யம் விளக்க உரைக்கு ராமனுஜர் பட்ட இன்னல்கள், இவருடைய இறுதி நாட்கள் என, பல தகவல்களை பாத்திரங்கள் மூலம் பேச வைத்துள்ளார்.
ராமானுஜர் வைணவர்க்கு மட்டுமல்லாது, உலகத்தில் உள்ள அனைத்து சமுதாயத்திற்காகவும் வாழ்ந்தவர்; அனைவருக்கும் ஆலய பிரவேசத்தை அன்றே துவங்கியவர்.
ராமானுஜர் ஒரு தத்துவமேதை, மனிதாபிமான மிக்க சமுதாயவாதி, சமய நல்லிணக்கம் கொண்ட குணசீலர். நாடு முழுவதும், பாத யாத்திரை சென்று, ஒருமைப்பாட்டை உணர்த்தியவர்.
பீபி நாச்சியாரையும், மேலக்கோட்டை கோவிலில் அமைத்து சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தியவர்.
அனைவரும் செல் வம் பெற்று, வளமாக வாழ திருக்கோஷ்டியூரில், குலம் தரும் செல்வம் தந்திடும், திருமந்திரத்தை எல்லாருக்கும் உபதேசம் செய்தவர்.
திருவரங்கன் கோவி லில் பணியாளர்களை அமர்த்தியது, மாணவர் இலக்கணம், முதலிய தகவல்களை தரும் நூல்.
காட்சி, 184ல் ராமானுஜர் பேசும் வசனம்! வைணவ பாகவதர்களே! இப்படி வாருங்கள்! நான் வில்லிதாசன் தோளில் கை போட்டு நடந்து வருவதை அபசாரமாக கருதும் நீங்கள்? உங்களை விட, வில்லிதாசன் புனிதமானவர் என்பதை உணருங்கள்.
குலத்தால் ஏற்றத் தாழ்வு கருதக் கூடாது. (பக்., 312) ராமானுஜர் ஆளவந்தரின் பாதுகைகளை வாங்கி, கண்ணில் ஒற்றிக் கொண்டார்.
திருவரங்கப் பெரு மான் (அசரீரியாக) உடையவரே! உம்மை யாம் எம் பார்வையிலேயே வைத்துக் கொள்ள வேண்டிய வசந்த மண்டபத்தை அளிக்கிறோம்! அங்கிருந்தே நீர் நல்லுபதேசம் செய்வீர் என்பது அவர் சிறப்பாகும். எல்லாரும் படித்துப்பயன் பெற வேண்டிய நூல்.