பத்திரிகையாளர், எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர் கவுதம் சஞ்சய். மேலை நாட்டு சிறு கதைகள் சிலவற்றை எளிய, இனிய தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்.
இரக்க குணம் உள்ள ஒரு பெண்ணை சித்தரிக்கும் ஜான்ஸ்டீன் பெக்கின், ‘மலர்ச்செடி’ திகில் உணர்வை எழுப்பும், எட்கர் ஆலன் போவின், ‘மர்ம மாளிகையின் வீழ்ச்சி...’ ஒருவர், ஒரு வீட்டில் தற்கொலை செய்து கொண்டால், அங்கு ஆவிகள் உலவும் என்ற நம்பிக்கையை வைத்து எழுதப்பட்ட, ஓ.ஹென்ரியின், ‘சம்பங்கி மணம்’ முதலிய கதைகள் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை!
இன்னும் சுவாரஸ்யமான கதைகளை தேர்ந்தெடுத்து இருந்தால் நன்றாக இருக்கும்.
– எஸ்.குரு