நூலகங்கள் பற்றிய பொதுவான செய்திகளையே விவரித்துச் சொல்லும் இந்நூலில் மரபு வழி முறையிலும், புது வகை முறையிலும் ஓலைச்சுவடிகள் பெரும்பாலும் மக்களிடையே பயன்பாடற்ற ஒன்று. காகிதத்தால் ஆன நூல்களைப் பாதுகாக்கும் முறைகள் ஓரளவு விவரிக்கப்பட்டுள்ளன.
பொதுவாக நூலகங்களில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு முறைகள் விளக்கப்பட்டுள்ளன. தனியார் நூலகங்களுக்கு இவை பயன்படும். எனினும், பொதுமக்கள் சாதாரண வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகளை தெளிவாகக் குறிப்பிடவில்லை.
நூலகர் – வாசகர் பற்றிய கட்டுரையும் மேம்போக்காகவே உள்ளது. ஒரு நூலகர் என்ற முறையில் நூலாசிரியர் கருத்துக்களை முன்வைக்க வேண்டும். பெரும் எதிர்பார்ப்போடு நூலுக்குள் நுழைபவர்களுக்கு சற்று சறுக்கலாகவே அமையும்.
– பின்னலூரான்