‘குருவே பிரம்மா, குருவே விஷ்ணு, குருவே மகேஸ்வரன், இறுதியாக அவரே பரம்பொருள்’ என்கிறது குரு கீதை. பகவான் ரமணரும் குரு, ஆன்மா, தெய்வம் மூன்றும் ஒன்று என்றார்.
அக இருளை அகற்றுவதே ஞானம், தன்னைத் தேடுவதே ஆன்மிகம் என்றார். தன்னை அறிந்து தன்னில் நின்ற அவரை உபநிடத காலத்து முனிவர் என்றார் ஓஷோ.
இப்படி பகவான் ரமணர் பற்றிய பலரது கருத்துக்களும், ரமணரது வாழ்க்கை வரலாறு, சீடர்களுடன் நடந்த சம்பாஷணைகளும் இதில் இடம் பெற்றுள்ளன.
முருகனார், சாது ஓம், சிவப்பிரகாசம் பிள்ளை, நடனானந்தர், வேங்கடராமய்யா, முதலியார்பாட்டி, கனகம்மை, எச்சம்மாப்பாட்டி என்று இன்றைய ஆசிரம நிலைவரை எல்லாவற்றையும் சுருக்கமாக விளக்கியுள்ள நூலாசிரியரின் ரமண பக்தி இந்நூலில் பளிச்சிடுகிறது.
– பின்னலூரான்