இளைஞர் உள்ளங்களில் காதல் எண்ணம் இருந்தாலும் வீட்டுப் பற்றும், நாட்டுப்பற்றும் இருக்கவே செய்யும். உழைக்கும் வலுவும் முன்னேறும் அறிவும் வாலிபப் பருவத்தில் மிகுதியாகவே இருக்கும். அவற்றை நல்லவைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்னும் உயரிய நோக்கில் இந்நூலிலுள்ள கதைகளை புனைந்துள்ளார் ஆசிரியர். தன்னம்பிக்கையும், தைரியமும் உள்ளவர் என்னும் நம்பிக்கை விதையை விதைத்துள்ளார் ஆசிரியர்.
இன்றைய இளைய சமுதாயம் என்ற உளி பெரியவர்கள் கைகளில் தான் இருக்கிறது என்னும் அறிவுரை, படைப்பாளர்களை சிந்திக்க தூண்டுவதாய் அமைந்துள்ளது.
–புலவர் சு.மதியழகன்