உலகு உய்ய வந்து அவதரித்த மகான் ராமானுஜர். அவரது வரலாற்றை இனிய கவிதைகளாக வடித்துள்ளார் விப்ரநாராயணன்.
ராமானுஜர், வைணவருக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலக சமுதாயத்திற்காகவே வாழ்ந்தவர். ‘வேரூன்றிய தீண்டாமையை வேரோடு அழித்த சமுதாயச் சிற்பியாவார். வேதாந்த ஞானி இவர்; வேதத்தின் சாரத்தை தந்தவர்; வேண்டுதல் வேண்டாமை இலாதவர்’ என்று ராமானுஜரைப் புகழ்கிறார்.
ராமானுஜரின் வரலாறு, அவர் கற்ற முறை, அவரின் ஆச்சார்யர்கள் பற்றிய செய்திகள், ஸ்ரீபாஷ்யம் விளக்கவுரைக்கு அவர் பட்ட இன்னல்கள், அவரின் இறுதி நாட்கள் எனப் பல செய்திகளை இந்நூலில் காணலாம்.
பக்தி இலக்கியப் பொக்கிஷம்!
– எஸ்.குரு