தினமலர் – ஆன்மிக மலர் இதழில் வெளியாகிறது, ‘கேளுங்க சொல்கிறோம்’ எனும் பகுதி. கோவில், தெய்வங்கள், மந்திரம், வாஸ்து, பரிகாரம் என, பல வகையில் வாசகர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கும், அவர்களின் பிறவகையான கேள்விகளுக்கும் வேத வித்தகர், ‘மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்’ தந்த பதில்களே, ‘அறிந்ததும் அறியாததும் – 2’ என்னும் இந்த நுால்.
ஏற்கனவே பகுதி – 1 வெளியாகி, வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.
கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் சுற்றி வளைத்து மூக்கைத் தொடாமல், தெளிவான, திடமான பதில்கள்... இந்த நுாலை ஒருவர் ஆழ்ந்து படித்தால், அவருக்கு அனேகமாக ஆன்மிக விஷயத்தில் சந்தேகம் எழவே எழாது. மிகுந்த மனத்தெளிவும், உற்சாகமும் கொண்டு பக்தியில் ஈடுபட இந்த நுால் பெரிதும் உதவும்.
எல்லார் இல்லங்களிலும் பூஜையறையில், கட்டாயமாக இருக்க வேண்டியது இந்த நுால்.
தமிழக ஆன்மிகப் பெருங்குடி மக்கள் இந்த நுாலை நிச்சயம் ஒரு பொக்கிஷமாக கருதிப் போற்றுவர் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
–இந்திரா சவுந்தர்ராஜன்