‘கைப்பேசிகளின் அலறல்களும், கணினிகளின் இரைச்சல்களும் பல்கியிருக்கும் அலுவலகப் பரபரப்புக்கு மத்தியில் கொஞ்சமாவது ரசிக்கத்தான் முடிகிறது வாழ்க்கையை... அந்தக் குதிரையின் காலடி சப்தத்தில் ஒளிந்திருந்தது பல நுாற்றாண்டுகளின் சோகம்... எப்போதோ தொலைத்த பொழுதுகளும், உறவுகளின் நினைவுகளும் மழையின் வழியாய் மனதில் உயிர்த்தெழுகிறது...!’ என்ற கவிதை வரிகள், இன்றைய சமுதாய சூழலை படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளன.