திராவிடமா? தீராவிடமா? என்ற நாலின் ஆசிரியர், சில ஆண்டுகள் திராவிடக் கட்சியில் இருந்தமையால் அக்கட்சியின் நெளிவு சுளிவுகளை நயம்பட எழுதியுள்ளார்.
முதல் கட்டுரை, ஈ.வெ.ரா.,வின் தனித்துவ போக்கினால் இயக்கத்தை விட்டு வெளியேறிய லட்சியத் தீபங்கள் எனத் துவங்கி, கடைசி கட்டுரையாக அருட்செல்வரின் எழுத்துக்கள் என, 15 கட்டுரைகளும், ஆறு பிற்சேர்க்கைகளும் உள்ளன. 49 நுால்களின் துணை கொண்டு, கருத்துக் களஞ்சியமாக, ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன.
தீண்டாமையை எதிர்த்த பிராமணத் திலகங்கள் என்ற தலைப்பில் ‘தமிழ் இலக்கிய உலகில் தனக்கென தனியிடம் பெற்ற பெருந்கையாளர், அந்தணர் குலத்தில் உதித்த அருந்தமிழ்ப் புலவர் கவியோகி சுத்தானந்த பாரதியார் ஆவார்.
கடந்த, 1893, ஜன., 13ல் சென்னை யங்மேன் அசோசியேஷனில் ஜி.சுப்ரமணிய அய்யர் தீண்டாமைக் கொடுமையை எதிர்த்து முழங்கிய வீர முழக்கம் (பக்.115). சமையல் நன்றாகத் தெரிந்த ஒருவர் சமையல் போட்டியின் முடிவுகளை அறிவிப்பது போல, அரசியலில் ஈடுபாடு கொண்ட ஆசிரியர், அரசியலையும், அரசியல்வாதிகளின் உளப்பாங்கையும் விளக்கியுள்ளார்.
அரசியல்வாதிகளின் செயல்பாடு பற்றி இந்நுாலில் தக்க சான்றுகளுடன், விரிவாக விளக்கப்பட்டுள்ளது. மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற அடிப்படையில் இந்த நுால் அமைந்திருப்பது பாராட்ட வேண்டியதாகும்.
– பேரா., இரா.நாராயணன்.