எஸ்.ஆர். சுவாமிநாதன், நிவேதிதா புத்தக பூங்கா, எண்.14, இரண்டாவது தளம், பீட்டர்ஸ் ரோடு, இராயப்பேட்டை, சென்னை-14. போன்: 9884714603; பக்கங்கள்: 144; விலை: ரூ. 55.00
இலக்கியங்களில், வட்டார இலக்கியத்திற்கென்று ஒரு தனித்துவமான வித்யாசமான இடம் உண்டு. ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களின் வாழ்வை, அவர்களது பண்பாட்டு விழுமியங்களை அவர்களது மொழியிலேயே பதிவு செய்வதுதான் வட்டார இலக்கியமாகும்.
அவ்வகையில் கி.ராஜநாராயணன் கரிசல் எழுத்தாளராகவும், நாஞ்சில் நாடன் குமரிமாவட்ட எழுத்தாளராகவும், சோலை சுந்தரபெருமாள் வண்டல் எழுத்தாளராகவும், இரா. சண்முகசுந்தரம் கொங்குநாட்டு எழுத்தாளராகவும் அறியப்படுகிறார்கள்.
வட்டார வழக்குகளை எழுத்தில் பதிவு செய்வதென்பது மிகவும் நுட்பமான பணி, அதை, இயல்புத் தன்மை மாறாது பதிவு செய்யாவிடில் செயற்கைத் தனம் எட்டிப் பார்க்கும்.
கொங்கு வட்டாரப் பின்னணியில் ஜீவனுள்ள மூன்று கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு, உணர்வலைகள் பொங்கிப் பரவாகிக்கும் வண்ணம் இந்த தலைச்சுமை நாவலை எழுத்தாளர் பழமன் ஒரு வாழ்வுச் சித்திரமாகவே தீட்டியிருக்கிறார் என்றே சொல்ல தோன்றுகிறது.
- எஸ்.ஆர். சுவாமிநாதன்.