நிவேதிதா புத்தக பூங்கா, எண்.14, இரண்டாவது தளம், பீட்டர்ஸ்ரோடு, இராயப்பேட்டை, சென்னை-14. போன்: 9884714603;பக்கங்கள்: 108;
வயலும் வயல் சார்ந்த வாழ்வுப் பாடுகளும் நிறைந்த தஞ்சை மாவட்டத்தின் இலக்கியப் பதிவுகள் காலங்காலமாக, அம்மண்ணின் அடித்தட்டு மூலக்கூறுகளைப் புறந்தள்ளியபடியே பதிவு செய்யப் பட்டு வந்தன. அத்தகைய உயர்சாதி இந்துத்துவ பண்பாட்டுப் பதிவுகளே அம்மண்ணின் இலக்கியம் என்றும் முன்மொழியப் பட்டு வந்தன.
ஒரு பாமர கதை சொல்லியின் மொழிக் குரலுடனும் நுண்ணிய சமூக, அரசியல் விமர்சனப் பார்வைகளுடனும் எண்பதுகளில் எழுதத் தொடங்கிய வண்டல் எழுத்தாளர் சோலை சுந்தரபெருமாளின் எழுத்துக்கள், தமிழ் இலக்கிய உலகில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தின.
ஒரு சமூகப் போராளியின் ஆவேசத்தோடு அவர் எழுதிய நஞ்சை மனிதர்கள், செந்நெல், தப்பாட்டம், பெருந்தினை ஆகிய நாவல்கள் வட்டார வழக்கு இலக்கியத்தில் புதிய வெளிச்சங்களைத் தோற்றுவித்தன. பழைய பதிவுகளின் பிம்பங்களை உடைந்தன.
இந்த குருமார்கள் தொகுப்பும் அவ்வகையில், மற்றுமொரு தளத்தில் புதிய அதிர்வுகளை ஏற்படுத்தும் இலக்கியப் பறையாக ஒலிக்கிறது என்பது மிகையல்ல.
- எஸ். ஆர். சுவாமிநாதன்