மிக உயர்ந்த சொற்கள், மிகச் சீரிய முறையில் உள்ளடக்கியதே கவிதை என்பர். இந்நுால் முழுவதும் ஆற்றல் நிறைந்த சொற்கள் பொங்கி வழிகின்றன. புறாக்கள் கொண்ட நேசத்திற்கு சாட்சியில்லை. ஆனால், காட்சி ஒன்றே கவிதையாய் காதலின் பிரிய புரிதல்களை மவுனத்தால் நெஞ்சங்களில் மலர்த்தி விடுகிறது. அதுபோல, இந்நுாலாசிரியரின் புதினக் கவிதைகள் வாசிக்கும் யாவருக்கும் புரிதல் மூலம் மகிழ்ச்சி பிரவாகத்தை மனதில் ஏற்படுத்தி விடுகிறது. கவிதை அன்பர்கள் அனைவரின் கைகளில் தவழும் இனிய நுால் என்று சொல்லலாம்.