எஸ்.ஆர். சுவாமிநாதன், நிவேதிதா புத்தக பூங்கா, எண்.14, இரண்டாவது தளம், பீட்டர்ஸ் ரோடு, இராயப்பேட்டை, சென்னை-14 . போன்: 9884714603; பக்கங்கள்: 236;
சோலை சுந்தரபெருமாள் கீழத்தஞ்சை வேளாண் மக்களின் வாழ்க்கையோடு அவர்களின் இரத்தமும் சதையுமான வாழ்வியலில் நெகிழ்ந்து மனசிலிர்ப்பைப் பெற்ற எழுத்தாளர்...
கு.ப.ரா. மௌனி, பிச்சமூர்த்தி, க.நா.சு. எம்.வி. வெங்கட்ராம், தி. ஜானகிராமன் ஆகியோரைப் போல இவரும் தஞ்சை
மாவட்டத்துக்காரர் தாம். எனினும், மேற்கண்ட மணிக்கொடி எழுத்தாளர்களிலிருந்து இவர் மாறுபடுகிறார் - கதைக்கருவைத் தேர்ந்தெடுப்பதிலும் தமிழ் நடையிலும் இவர் வித்தியாசப்பட்டு நிற்கிறார்.
தமிழ் இலக்கியப் பெரும் பரப்பில் வண்டல் இலக்கியம் என்று தரம் பிரித்து அறியத்தக்க ஒரு இலக்கிய வகையில் இருப்பை அடையாளப் படுத்தியவர் சோலை சுந்தரபெருமாள். செந்நெல் நாவல் மூலம் பரவலாக அறியப்பட்ட இவர் கீழத்தஞ்சை - திருவாருரை ஒட்டிய உட்கிராமமான அம்மையப்பன் காவனூரில் பிறந்து அங்கேயே வாழ்ந்து வருகிறவர். இவரது எழுத்துக்கள் இயற்கையின் உயிர்ப்பும் யதார்த்த அழகியலும் கொண்டவை.
-தி.க.சி.