மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஹரிஹரன், சமூகம், காதல், இயற்கை குறித்த தன் கவிதைகளை, ‘எங்கே போனாய் தமிழினமே’ என்ற முதல் நுாலில் தொகுத்துள்ளார்.
தான் கவிதை எழுத துாண்டுகோலாக அமைந்த கல்லுாரி பேராசிரியரான, மதுரை காந்தி மியூசியம் செயலர் குருசாமியை வெளியிட வைத்து, பாராட்டையும் பெற்றுள்ளார்.
நீரால் கருவாகி, நீரால் அருவாகி, நீரால் உருவாகி, நீரே உயிர்த் திருவாகி, சனனம் முதல் மரணம் வரை நீரே என, இயற்கை மீதான காதலால் நீரை பெருமிதத்துடன் கவிதை வடித்துள்ளார். நுாலகமே என் கோவில் என, நுாலகத்தின் அருமையை உணர்த்தியிருப்பது பாராட்டுக்குரியது.
நாட்டிற்கு உழைத்தவர்களை வாருங்கள் வாழ்த்துவோம் என்ற தலைப்பில் கவிதை படைத்திருப்பது, நாட்டுப்பற்றை பறைசாற்றுவதாக உள்ளது. காதல், குடும்பம் என எல்லாவற்றையும் தன் கவிதையால் சுட்டிக்காட்டவும் தவறவில்லை.
– மேஷ்பா