பாரத நாட்டின் மாபெரும் இதிகாசம் ராமாயணம். அதில் சுந்தர காண்டம் மிகச் சிறப்பு. இதை படித்தால் வாழ்வில் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம். நாட்டில் பிறந்த அனைவரும், ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் கண்டிப்பாக படிக்க வேண்டும். அந்த வகையில், சுந்தர காண்டத்தை, சித்திர கதை வடிவில், எளிமையாக, சுருக்கமாக ஆசிரியர் தந்துள்ளது பாராட்டுக்கு உரியது. சுந்தர காண்டத்துடன் நிறுத்தாமல், யுத்த காண்டத்தையும் சேர்த்து, ராவணனை ராமர் வெற்றி கொள்ளும் செய்தி வரை தந்திருப்பது சிறப்பு.